********
நல்லோன் வல்லோன்
ஆசான் இவனென
நறுக்கெனக் குருகரம் பற்றினான்!
சொல்லாற் றலிலே
சூழும் சுகமெனச்
சுவைபடும் கவிதைகள் கொட்டினான்!
பற்றைத் தமிழில்
பதித்தே பெண்ணியம்
படுநிலை அவதியைச் சுட்டினான்!
வெற்று முகமாம்
விதவைக் கோலமோ
விடுதலை பெறஇவன் தட்டினான்!
நாட்டின் வளத்தை
நயமாய் பாடியே
நனிமிகு சிறப்பதை எட்டினான்!
ஊட்டும் தாயாம்
உயர்ந்த மொழித்தமிழ்
உருவதே இறையெனக் குட்டினான்!
எண்ணும் நினைவோ
எல்லா(ம்) இனமென
இருந்தவன் பாரதி தாசனாம்!
இந்நாள் இவனை
ஏத்திப் போற்றுதல்
இகத்தவர் அனைவரின் கடமையாம்!
************
கவிஞர்.மா.அம்பிகாபதி
கடாரம்
************
No comments:
Post a Comment