SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Sunday, 19 April 2020



பொது அறிவு புதிர்ப்போட்டி

நாள்        
23.04.2020 ( வியாழன் )      

நேரம்     
மாலை மணி 4.00 முதல் 5.00 வரை                                              

விதிமுறைகள் பின்வருமாறு :

   1).ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்து   கொள்ள முடியும்.

   2 )  புதிர்ப்போட்டி இயங்கலை (Online) வழி நடத்தப்படும்.

   3) 23.04.2020 (வியாழன்) போட்டியின் இணைப்பை சரியாக 4.00க்கு வலைப்பதிவில் இணைப்பைப் பெறலாம். மாலை மணி 5.00க்கு  இணைப்பு அகற்றப்படும்.

   4)கொடுக்கப்பட்ட நேரம் 60 நிமிடம். அதற்குள் மாணவர்கள் செய்து அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் பதில்கள் ஏற்றுக் கொள்ள படமாட்டாது.

   5)புதிர்ப்போட்டியில் மொத்தம் 50 கேள்விகள் உள்ளன. 1 கேள்விக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

   6)மாணவர்கள் வலைப்பதிவில் உள்ள பொது அறிவு வினா விடையைப் பார்த்து விடைகளை அளிக்கலாம். பெற்றோர்களின் வழிகாட்டல் இருக்கலாம். ஆனால், முழுமையாகப் பெற்றோரே பதிலளிக்கக் கூடாது.அவ்வாறு செய்தால் மாணவர்களுக்குப் பொது அறிவு தொடர்பான எந்தப் பலனும் கிடைக்காது.நம் நோக்கமும் நிறைவேறாது.

   7)எல்லா வினாக்களும் வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள 1 முதல் 5 வரையிலான பொது அறிவு வினா விடைகளிலிருந்து மட்டுமே கொண்டு தயார் செய்யப்பட்டது.

   8) புதிர்ப்போட்டியின் போது மாணவர்கள் தங்களின் முழுப்  பெயர், வகுப்பின் பெயர், மின்னஞ்சல் முகவரியையும் பாரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மின்னஞ்சல் இல்லாத மாணவர்கள் starumugampillaisp@gmail.com என்று பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்குச் சான்றிதழ் மின்னஞ்சலின் வாயிலாக போட்டி முடிந்தவுடனே அனுப்பப்படும்.

   9) புதிர்ப்போட்டியில் கிடைக்கப் பெறும் புள்ளிகளைப் பொறுத்தே பரிசுகள் வழங்கப்படும். அதிகமான புள்ளிகள் பெற்ற மாணவரே முதல் இடத்தை அடைவார். ஆனால், எ.காட்டு 3 மாணவர்கள் 100 புள்ளிகளைப் பெற்றுவிட்டால் அம்மூன்று மாணவர்களுக்கும் மீண்டும் 10 கேள்விகள் அடங்கிய புதிர்ப்போட்டி நடத்தப்படும். முதலிடம்,இரண்டாவது,
      மூன்றாவது எனத் தேர்ந்தெடுக்கப்படும்.

   10)  பரிசுகள் பள்ளித் திறந்தவுடன் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.

      நன்றி, வணக்கம்.

     ‘ASPIRE TO EXCEL’ வெற்றிக்கு வேட்கை

     அன்புடன்,
      தலைமையாசிரியர்

மாணவர்களுக்கான பரிசுகள்.

1-வது பரிசு STAEDTLER LUNA C48 WATERCOLOUR PENCILS RM45.90




2-வது பரிசு FABER CASTELL 24 JUMBO COLOUR PENCILS RM27.00

3-வது பரிசு FABER CASTELL MY ADVANCED COLOURING SET RM24.90
 4-வது பரிசு DELL WIRED OPTICAL USB MOUSE (BLACK) RM17.00

5-வது பரிசு  STABILO SWANS PREMIUM 12 COLOURS RM5.00
 10 ஆறுதல் பரிசுகள் 120 COLOR SHEETS RULED WRITING TABLED RM4.00






No comments:

Post a Comment

Sambutan Hari Bumi Peringkat Sekolah 2024