SJK T ARUMUGAM PILLAI PROGRAM TRANSFORMASI SEKOLAH TS25 - ASPIRE TO EXCEL வெற்றிக்கு வேட்கை

Saturday, 25 April 2020

புதுப்பானை

முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்துக் கொண்டிருந்தான். முல்லா ஒரு நாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார்.

” பையா! இந்தப் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா” எனக் கூறினார்.

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான்.
முல்லா சற்றுத் தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.

பையன் திரும்பி வந்து, ” என்ன எஜமானே” என்று கேட்டான்.

இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார்.

பையன் திடுக்கிட்டுத் திரும்பி, ” எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு முல்லா, ” பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்துக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?” என்று பதிலளித்தார்.


மூலம் - சிறுவர் மலர்

No comments:

Post a Comment

                                                        GOTONG-ROYONG MADANI 2025                                                https://www...